மேஷம்
பணநெருக்கடி அகலும் நாள். குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.
ரிஷபம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்
விரயங்கள் ஏற்படும் நாள். வீடு மாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது.
கடகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும்.
சிம்மம்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கன்னி
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
துலாம்
புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.
விருச்சிகம்
தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.
மகரம்
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
கும்பம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.
மீனம்
சந்தர்ப்பங்கள் சாதமாக அமையும் நாள். சகோதரர்கள் ஆதரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் உண்டு.