கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த 42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு மேல் ஹெல்த் இன்சூரன்ஸ் தீர்வு: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சிஓஓ அமிதாப் ஜெயின் தகவல்!!

கோவை,
மருத்துவக் காப்பீட்டு வழங்குநரான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் புதுமையான நலவாழ்வுத் திட்டங்கள், தாக்கம் ஏற்படுத்திடும் சிஎஸ்ஆர் சேவைகள் மற்றும் அதிநவீன காப்பீட்டுத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டில் அதன் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கோவையில் கிராமப்புற மருத்துவக் காப்பீட்டில் ஒரு வலுவான முக்கியத்துவத்துடன் மற்றும் எடை பராமரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்த பராமரிப்பு போன்ற வளர்ந்து வரும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிவர்த்தி செய்கின்ற வகையில், மாநிலம் முழுவதும் உயர்தர ஹெல்த் இன்சூரன்ஸ் சேவையை வழங்குவதை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோவையில் ஸ்டார் ஹெல்த் முன்னிலையில் இருப்பது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சிஓஓ அமிதாப் ஜெயின் கூறுகையில், “ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில், கோவை மக்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.

எங்களின் புதுமையான சூப்பர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்டார் ஆரோக்யா டிஜி சேவா முன்முயற்சியின் மூலம், அவர்களின் இருப்பிடம் அல்லது சூழ்நிலையை பொருட்படுத்தாமல் உயர் தர ஹெல்த் இன்சூரன்ஸ் சேவையை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

கோவை நகரத்தில் எங்களது இருப்பையும் மற்றும் தாக்கத்தையும் தொடர்ந்து விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் கோவை மற்றும் சேலத்தில் பணமில்லா வசதிகளை வழங்கும் 614 மருத்துவமனைகளில் பரந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.

இந்நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, 2024 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த 42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு மேல் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கியுள்ளது.

ரூ. 396 கோடி ஆனது, 2024 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் கோவை மற்றும் சேலத்தின் 6 மாவட்டங்களின் கீழ் வரும் ஸ்டார் ஹெல்த் கிளை அலுவலகங்களின் மொத்த எழுதப்பட்ட பிரீமியமாகும்.

வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், குறிப்பாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்டார் ஹெல்த் புதுமையான சூப்பர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விரிவான பாலிசியானது, முன்பே இருக்கும் நிலைமைகளுக்கு குயிக் ஷீல்டு கவரேஜ், நிதிப் பாதுகாப்பின் மீதான உன்மையான வரம்பற்ற காப்பீட்டுத் தொகை மற்றும் கடுமையான நோய் அல்லது விபத்து மரணம் ஏற்பட்டால் பிரீமியம் தள்ளுபடி பலன்கள் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *