செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது – நயினார் நாகேந்திரன் பதில்!!

நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  • நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார்.
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை.
  • கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை.
  • டி.டி.வி. தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை.
  • அ.தி.மு.க. இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.
  • செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது என்றார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *