கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்குமா ருக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து!

கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் 911 GT3R என்ற பிரிவில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி (901) மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸிங் போட்டியில் 992 போர்ஷே பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார் அணி. ஒட்டுமொத்த ரேஸில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி 23-வது இடத்தை பிடித்துள்ளது. தனது அணி வெற்றி பெற்றதும் தேசிய கொடியுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார் நடிகர் அஜித் குமார்.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும் அஜித் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது.

இந்த நிலையில், கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாழ்த்துக்கள் எனது அன்பே…நீங்கள் இதை செய்துவிட்டீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். லவ் யூ என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *