சுந்தர் சி நடித்த வல்லான் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியைவெளியிட்ட படக்குழு !!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியானது மத கஜ ராஜா திரைப்படம். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்த வல்லான் திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் பிரம்மாண்டமாக தயாரிக்க,மணி சேயோன் இயக்கியுள்ளார். சுந்தர் சி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு சிறுமிகள் உயிருக்கு ஆபத்தான முறையில் கோல்ஃப் விளையாடுவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *