சென்னை:
பிரபாகரன் உட்பட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நானும் என்னுடைய தம்பிகளும் பெரியாரை ஏற்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவரிடம் பெரியரின் கருத்து தொடர்பாக மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய சீமான், “பிரபாகரன் உட்பட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நானும் என்னுடைய தம்பிகளும் பெரியாரை ஏற்க மாட்டோம். பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்.
பெரியார் குறித்து நான் கொஞ்சம் ஓவராக போய்விட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். இப்பொழுதுதான் நான் தொடங்கியுள்ளேன்.
இன்னும் போகப்போக நிறைய உள்ளது. டெபாசிட்டை இழந்தாலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், விலைபோகாத வாக்குகள் எங்களுக்கு பதிவாகி உள்ளது. நோட்டாவின் வாக்குகள் அதிகரிக்க காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.