அமெரிக்கா:
அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை (HUD) அலுவலகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எலான் மஸ்க்-இன் கால்களை முத்தமிடும் வீடியோ ஒளிபரப்பானதால் பரபர சூழல் உருவானது. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவின் மீது “உண்மையான ராஜா வாழ்க” என எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோவை உருவாக்கியது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
மேலும் அரசு அலுவலக தொலைகாட்சியில் இந்த வீடியோ ஒளிபரப்பானது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிலர் இணைய சேவைகள் ஹேக் செய்யப்பட்டு வீடியோ ஒளிபரப்பப்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர். வெறும் எட்டு நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ மிக வேகமாக வைரல் ஆனது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த HUD துறை செய்தித் தொடர்பாளர் கேசி லொவெட், “வரி செலுத்துவோர் பணம் மற்றும் நேரம் வீண்விரயமானது.
இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.