ஈஷாவில் களைகட்டும் சிவராத்திரி -இன்னிசை, பாடல்கள், நடனம் என கொண்டாட்டம்!!

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் சத்குருவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.

அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், எல்.முருகன், அண்ணாமலை, எஸ்.பி வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 295 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஈஷா மையம் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில், ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

இந்த நாளில், ஒரே நேரத்தில் லட்ச கணக்கான மக்கள் ஈஷா யோகா மையத்தில் கூடுகின்றனர்.

திரைபிரலங்கள் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வது வழக்கம்.

கடந்த காலங்களில் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் 7 லட்சம் பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் சத்குருவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.

அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், எல்.முருகன், அண்ணாமலை, எஸ்.பி வேலுமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஆதியோகி சிலை மின் விளக்குகளால் ஜொலி ஜொலிக்கிறது. ததும்பும் இன்னிசை, பாடல்கள், நடனம் என ஈஷாவில் மகா சிவராத்திரி விழா களைகட்டியுள்ளது.

பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த ரசிகர்கள் மெய் மறந்து நிகழ்ச்சிகளை பார்த்துகொண்டிருக்கின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *