கோவை;
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் சத்குருவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், எல்.முருகன், அண்ணாமலை, எஸ்.பி வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.
ஈஷா சிவராத்திரி விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாரத நாட்டின் ஆன்மீகம் என்பது தமிழ்ப் பண்பாட்டை குறிப்பிடாமல் நிறைவு பெறாது. தமிழ் பண்பாட்டில் சிவபெருமானுக்கு என்று தனி வழிபாடும் இடமும் உள்ளது.
மகா கும்பமேளாவை போலவே கோவையில் பக்தி கும்பமேளாவாக சிவராத்திரி விழா உள்ளது.
யோகக்கலை பாரம்பரியம் மிக்கது. நிகழ்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. ஈஷா மையம் பல லட்சம் பேரை யோக மார்க்கம் மூலம் நெறிப்படுத்தி வழிகாட்டுகிறது” என்றார்.
முன்னதாக கோவை ஈஷா யோகா மையத்தை சுற்றிப்பார்த்த அமித்ஷா, நாகர் சிலைக்கு வழிபாடு செய்து, தியான லிங்க பூஜையில் பங்கேற்றார்.