சென்னை;
பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தால் “போங்க, போங்க” என கிண்டல் செய்கிறார்.
ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக சார்பாக கொடுக்கப்படும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்து கொள்ளப்படுவதில்லை. பேரவையின் மரபையும் கண்ணியத்தையும் சபாநாயகர் காக்கவில்லை.
அப்பாவு மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. நாங்கள் 40 நிமிடம் பேசினால் 35 நிமிடம் அமைச்சர்கள் குறுக்கிடுகிறார்கள்.
அப்பாவு அவர்கள் ஆசிரியர், அவர் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் பதவி நீக்கம் கோறுகிறோம். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். சபாநாயகரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது.
அதிமுக உறுப்பினர்கள் பேசினால் பேரவைத் தலைவர் அவசரப்படுத்துகிறார். அப்பாவு எங்களை பார்த்து நகைக்கிறார்” எனக் கூறினார்.