சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி – வைகோ குற்றச்சாட்டு…!!

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி செய்ததாகவும், நிர்பந்தத்தால் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக திருச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக எடுத்து செல்கிறார். கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம்.

தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்து விட்டது. சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே ஆறாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது, எனக் கூறினார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்கு, டக்ளஸ் தேவானந்தா தமிழ் இனத்தின் முதல் எதிரி. தேர்தல் அறிக்கையில் சிலவற்றை கூறுகையில், மாநில அரசுகள் அதிகாரம் கொண்டதாக விளங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் மாநில சுயாட்சிக்காகவும், ஒன்றியத்தில் கூட்டாட்சி முறை நிலவவும் உரத்த குரல் கொடுப்போம் எனக் கூறினார்.

பாஜக அரசின் சர்வாதிகார மதவாத செயல்பாடுகளை இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தடுத்து நிறுத்த மதிமுக முனைப்புடன் பாடுபடும் என்றும், சமூக நீதியை காக்க மதிமுக தொடர்ந்து பாடுபடும் எனவும் கூறினார்.

மேலும், இந்தி திணைப்பையும், வேற்று மொழி ஆதிக்கத்தையும் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும் என்றும், ஒன்றிய அரசு நதிநீர் படுகை மேலாண்மை சட்ட முன் வடிவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முடிவை எதிர்த்து மதிமுக போராடும் எனவும், மேகதாதுவில் தடுப்பு அணை கட்டக் கூடாது என்று கூறினார்.

விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை வெளியிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் எனக் கூறிய அவர், தேசிய பசுமை தீர்ப்பாயம் மணல் அள்ளுவதற்கு விதித்துள்ள தடை உத்தரவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவோம் என்பது உள்பட 74வாக்குறுதிகள் உள்ளன என தெரிவித்தார்..

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *