ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா – எம்.எஸ்.தோனி ஓகே சொன்ன பிறகு தான் அந்த முடிவை எடுத்தேன் – பிராவோ……

சென்னை:
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த ஐ.பி.எல். தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்று பேட்டி ஒன்றில் பிராவோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதில் அளித்த பிராவோ, “கே.கே.ஆர். vs சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினால், கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். நான் அந்த அணியில் தான் ஆலோசகராக இருக்கிறேன்.

இதனை எம்.எஸ்.தோனி புரிந்துகொள்வார். எனக்கு கொல்கத்தா அணியில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் தோனியை தான் அழைத்து பேசினேன்.


அவர் சம்மதம் சொன்னபிறகு தான் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனி மேல் வைத்திருக்கும் மரியாதை” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *