வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்!!

மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.

ரோமை சார்ந்த மல்யுத்த வீரர்கள் உடல் அழகு கூடும் என்பதற்காக வெங்காயத்தை அரைத்து உடலில் பூசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.
வெயில் காலம் வந்து விட்டது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வியர்வையுடன் வீடு திரும்பும் அனைவரும் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஒரு வெங்காயத்தை பொடிதாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீர்க்கடுப்பு வராது. குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலந்தும் நெய்யில் வறுத்தும் சாப்பிட கொடுக்கலாம்.

இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.


வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது.

பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது.

நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும்.

வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்.


நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *