”தமிழகத்தில் 100 நாள் பணிகளில் போராட்டம் என்ற பெயரில் திமுக அரசு நூறு நாள் பணியாளர்களை வைத்து நாடகம் ஆடுகிறது” – திமுகவை விளாசிய ராஜேந்திர பாலாஜி!!

சென்னை:
தமிழகத்தில் 100 நாள் பணிகளில் போராட்டம் என்ற பெயரில் திமுக அரசு நூறு நாள் பணியாளர்களை வைத்து நாடகம் ஆடுகிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும்.

இந்த திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்திருந்தார். முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக, அதிமுக அடிமட்ட தொண்டர் முதல் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் 100 நாள் பணியாளர்களை வைத்து போராட்டம் என்ற பெயரில் மத்திய அரசை குற்றம் சாட்டி நாடகம் ஆடி வருகிறது திமுக அரசு.

நல்ல விஷயத்திற்கு போராட்டம் நடத்தினால் பரவாயில்லை, இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாடகம் ஆடி வருகிறார்கள்.

நீட் தேர்வு வருவதற்கு காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டணியில் இருந்த திமுக அரசும் தான் காரணம்.

இப்படி நாடகமாடி எடப்பாடி பழனிச்சாமி மீது பழி போடுவது முழு பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு சமமாகும்.

பொய்களை மட்டுமே பேசி தமிழக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று திமுகவை சேர்ந்த பொய்யர்கள் கனவு காண்கின்றனர்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *