திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவி்ழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திக தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதணைகள் செய்யப்பட்டது.
இதனையடுத்து காலை 6 மணிக்கு மேல் 7.25க்குள் கோயில் பிராகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான ரிஷப கொடி ஏற்றப்பட்டது.
இந்த கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.