‘குட் பேட் அக்லி’படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் !!

சென்னை:
நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தான் இசையமைத்த 3 பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரூ.5 கோடி இழப்பீடு வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள்ளார்.

3 பாடல்களையும் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்துவதை உடனே நிறுத்தவும், 7 நாட்களுக்குள் படக் குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் இளையராஜா வலியுறுத்தியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *