லாறு காணாத வகையில் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனத்தின் பால் விற்பனையும் கடும் சரிவை சந்திக்கத் தொடங்கியது.
இதனால் குறைந்த பால் விற்பனை அளவை உயர்த்திடும் நோக்கத்திலும் அதிகளவில் விற்பனையாகும் வணிக பயன்பாட்டிற்கான நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 4.00ரூபாய் குறைக்க முடிவு செய்து முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி லிட்டருக்கு 2.00ரூபாயும்,நேற்று (24.04.2025) முதல் லிட்டருக்கு 2.00ரூபாயும் என லிட்டருக்கு 4.00ரூபாய் விற்பனை விலை குறைப்பை அந்நிறுவனம் தற்போது அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி ஆரோக்யா 500மிலி நிறைகொழுப்பு பால் பாக்கெட் 40.00ரூபாயில் இருந்து 38.00ரூபாயாகவும், 1லிட்டர் நிறைகொழுப்பு பால் பாக்கெட் 75.00ரூபாயில் இருந்து 71.00ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk) மற்றும் தயிர் விற்பனை விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் பொனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் பால் (நிறைகொழுப்பு மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால்), தயிர் விற்பனை விலையை உயர்த்திய ஹட்சன் நிறுவனம் தற்போது பால் விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது,
குறிப்பாக நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) விற்பனை விலையை மட்டும் குறைக்க முன் வந்திருப்பது ஏற்புடையதல்ல.
எனவே நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் தயிர் விற்பனை விலையையும் குறைக்க ஹட்சன் நிறுவனம் முன் வர வேண்டும்,
அதுமட்டுமின்றி புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல ஹட்சன் நிறுவனத்தை பின்பற்றி கடந்த மார்ச் மாதம் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அதன் விற்பனை விலையை உடனடியாக குறைக்க முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
அவ்வாறு பால், தயிர் விற்பனை விலையை குறைக்க முன் வராத தனியார் பால் நிறுவனங்களுக்கு பொதுமக்களும், சில்லறை வணிகர்களும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அனைத்து தனியார் பால் நிறுவனங்களுளையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.