இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார். அவருக்கு வயது 84. நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான கஸ்தூரி ரங்கன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைவராக பணியாற்றியுள்ளார்.
இதேபோல் தேசியக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு தலைவராகவு அவர் பணியாற்றினார். மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிய, பெருமதிப்பிற்குரிய டாக்டர் திரு. கஸ்தூரி ரங்கன் உடல் நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் கஸ்தூரி ரங்கன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்த அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். இந்த நிலையில், கஸ்தூரி ரங்கன் மறைவிற்கு தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.