சென்னை:
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல, இது தமிழ்நாடு மறந்துவிடாதீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 6ஆம் தேதி காவலர்கள் நாள் கொண்டாடப்படும். சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருதுகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதற்கு காவல் துறைதான் காரணம்.ச ட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது.
சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல, இது தமிழ்நாடு மறந்துவிடாதீர்கள்.
மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள்; ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி என பல தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.
இது கட்சியின் அரசு அல்ல, ஒரு கொள்கையின் அரசு என செயல்பட்டு வருகிறோம். இது தனிமனித சாதனை அல்ல, அமைச்சரவையின் சாதனை என கூறினார்.