சென்னை:
எல்லா தேர்தலும் தோல்வியடையும் அதிமுகவை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
திமுக சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், கேரளா அரசு இந்த வழக்கில் தன்னை இணைத்து கொண்டுள்ளது போல் தமிழக அரசும் இந்த வழக்கில் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பு ரீதியாக வாதங்களை வைக்க வேண்டும்.
இதற்கு திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்த வேண்டும். அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கருத்துக்கு நிர்மல் குமார் கூறிய கருத்தை நான் வழிமொழிகிறேன்.
தவெக தலைவருடன் ஆலோசனை செய்த பிறகு தான் எங்களது கருத்துக்களை தெரிவிக்கிறோம்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து ஏற்கனவே தலைவர் விஜய் கருத்து தெரிவித்து விட்டோம், கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரி ஆகியோருடன் கூட்டணி இல்லை, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ஒரு கட்சியை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விஜயின் மக்கள் சந்திப்பு வரும் டிசம்பர் மாதத்திற்குள் பெரிய அலையாக மாறும். கோவையில் திட்டமிட்டு ரோடு ஷோ நடத்தவில்லை, விஜய் எங்கு செல்கிறார், அங்கு செல்கிறார் என்ற தகவலை உளவுத்துறை தான் லீக் செய்கிறது” என்றார்.