சென்னை:
பாமக உட்கட்சி பிரச்சனையில் யாரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை, மருத்துவர் என்றால் எங்களுக்கு ஒருவர் தான் என பாமக பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில் மதி குழுமம் சார்பாக கண் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொருளாளர் திலகபாமா, “பாமக மக்கள் பணி செய்து வருகிறேன்.
தமிழகத்தில் நிர்வாக சீர்கேடு, மது அடிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரக்கூடிய நிலையில் பாமக உட்கட்சி பிரச்சனையில் யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை. மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
பாமகவில் மருத்துவர் சொல்வதைம் சிந்திப்பதை தலைவர் அன்புமணி வழியில் அனைவரும் செயல்படுத்தி வருகிறோம். தங்களுக்கு மருத்துவர் என்றால் ஒருவரை அவர் ராமதாஸ் மட்டுமே! எனக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் வேண்டும்” என்றார்.
அன்புமணி மற்றும் ராமதாஸ் அவர்களுக்கு முதலில் பிரச்சனை ஏற்பட்ட போது அன்புமணிக்காக முதலில் குரல் கொடுத்தவர் பாமக பொருளாளர் திலகபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தும் தாம் ஏன் செல்லவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் தெரிவித்து விலகி சென்றார் பாமக பொருளாளர்.