டெல்லி;
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கும்போது தோனியின் காலை தொட்டு வைபவ் சூர்யவன்ஷி வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.