சென்னை:
பிரபல இயக்குனர்மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. தக் லைஃப் படத்தில் இடம் பெற்ற ஜிங்குச்சா மற்றும் ஷுகர் பேபி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கொச்சியில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன் ” நான் ஏற்கனவே ஒருமுறை கூறியுள்ளேன். நடிப்பில் இருந்து என்றும் ஓய்வு பெற மாட்டேன் அப்படி நான் ஓய்வு பெற்றால் அன்று நான் இறந்திருப்பேன்” என கூறினார்.
இந்த வயதிலும் கமல்ஹாசன் நடிப்பின் மீது எவ்வளவு பற்றோடு இருக்கிறார் என இந்த நிகழ்வு எடுத்து காட்டுகிறது.