27-ந் தேதி (செவ்வாய்)
- சிவகாசி விசுவநாதர் விழா தொடக்கம்.
- மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
- மேல்நோக்கு நாள்.
28-ந் தேதி (புதன்)
- முகூர்த்த நாள்.
- சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் பவனி.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
- சமநோக்கு நாள்.
29-ந் தேதி (வியாழன்)
- சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- மேல்நோக்கு நாள்.
30-ந் தேதி (வெள்ளி)
- சதுர்த்தி விரதம்.
- குரங்கணி முத்து மாலையம்மன் வருசாபிஷேகம்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் பவனி.
- திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகன சேவை.
- சமநோக்கு நாள்.
31-ந் தேதி (சனி)
- சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
- திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர்,
- காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
- மேல்நோக்கு நாள்.
1-ந் தேதி (ஞாயிறு)
- சஷ்டி விரதம்.
- திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் உற்சவம் ஆரம்பம்.
- மாயாவரம் கவுரிமாயூர நாதர் புஷ்ப வாகனத்தில் பவனி.
- உத்தமர் கோவிலில் சிவபெருமான் சூரிய பிரபையில் புறப்பாடு.
- நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி விழா தொடக்கம்.
- கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (திங்கள்)
- மதுரை கூடலழகர் வைகாசி உற்சவம் ஆரம்பம்.
- நயினார்கோவில் நாகநாதர் காலை இந்திர விமானத்திலும், இரவு பூத வாகனத்திலும் பவனி.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விழா தொடக்கம்.
- கீழ்நோக்கு நாள்.