இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.
மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
…
‘நீங்கள் நலமா’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யும் ‘நீங்கள் நலமா’ திட்டத்தை இன்று (மார்.06) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 4ஆம் தேதி மயிலாடுதுறையில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், அரசுத் திட்டங்களின் பயன்கள் உரிய மக்களை சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள மார்ச் 6ஆம் தேதி ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் அரசுத் திட்டங்கள் செம்மைப்படுத்தப்படும்.
மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்டறிவார்கள். முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.