தனி இசைக் கலைஞர்கள் கவலை பட வேண்டாம் உங்களை வந்து சேர வேண்டியது கண்டிப்பாக வந்து சேரும் – சந்தோஷ் நாரயணன் ஆதங்கம்!!

எஞ்சாய் எஞ்சாமி எனும் பாடல் மார்ட் 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியானது.இந்த பாட்டை பாடியவர் ‘அறிவு’ மற்றும் ‘தீ’. பாடகி தீ- க்கு இதுவே முதல் பாடல் ஆகும். சந்தோஷ் நாராயணன் தான் இப்பாடலிற்க்கு இசையமைத்தார்.

இப்பாடல் மாஜா என்னும் ம்யூசிக் லேபல் தயாரித்தது.

பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.

இந்தப் பாடல் தமிழ் பாடலை உலகளவிற்க்கு கொண்டு புகழ் வர செய்தது. இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டு முடிவடைந்த நிலையில் .

அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார் அதில் அவர் “இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை , இந்த பாடலுக்கான வருமானம் எல்லாம் அந்த பாடல் தயார் செய்த ம்யூசிக் தயாரிப்பாளர்களுக்கே செல்கிறது .

நான் இது வரைக்கும் எந்த வலைதளங்களிலும் இதை பற்றி பேசியதில்லை. இதை பற்றி இப்பொழுது பேச தோன்றியது அதனால் கூறுகிறேன் . இப்பதிவினை முடிந்த அளவுக்கு அனைவருக்க்கும் பகிர செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தனி இசைக் கலைஞர்களுக்கு கூடுதல் வெளிப்படை தன்மையாக இயங்கும் தளங்கள் தேவை அதனால் நான் ஒரு ம்யூசிக் ஸ்டூடியோ ஒன்று தொடங்குவேன் .

தனி இசைக் கலைஞர்கள் இதனால் கவலை பட வேண்டாம் உங்களை வந்து சேர வேண்டியது கண்டிப்பாக வந்து சேரும்” என்று அவரின் ஆதங்கத்தை அதில் பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *