தித்திப்பான ரசமலாய் கேக் செய்வது எப்படி!!

பாலில் தயாராகும் இனிப்பு பலகாரங்களில் ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது. அதன் தித்திப்பை மேலும் மெருகேற்றி சுவைத்து சாப்பிடுவதற்கு, சுவையான ரசமலாய் கேக். விழா நாள்களிலும், பூஜை நாள்களிலும் ஒரே மாதிரியான ஸ்வீட் பலகாரங்கள் சாப்பிட்டு சோர்வடைந்து விட்டீர்களா. இதேபோல் உங்களுக்கான மாறுபட்ட ரெசிபியான தித்திக்கும் சுவையுடன் கூடிய ரசமலாய் கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால்- 1 லிட்டர்

கண்டன்ஸ்டு மில்க்- 250 கிராம்

சர்க்கரை- 300 கிராம்

குங்குமப்பூ- தேவையான அளவு

கிரீம்- தேவையான அளவு

பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க

பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்

பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

எண்ணெய்- ஒரு மூடி

வினிகர்- ஒரு ஸ்பூன்

ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

ரோஸ் வாட்டர்- ஒரு ஸ்பூன்

டோண்டு மில்க்- 200 மில்லி

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பானை பாலை ஊற்ற வேண்டும். அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தால் அது மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். பின்னர் அதில் வினிகர், ரோஸ் வாட்டர், எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதன்பிறகு அதில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஆகியவற்றை சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கட்டி இல்லாமல் கேக் மாவு பதத்திற்கு கலந்து அதனை கேக் பவுலில் உள்ளே வெண்ணெய் தடவி அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்துக்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு கேக் கலவையை உள்ளே வைத்து 45 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

அதன்பிறகு கேக்கை வெளியே எடுக்க வேண்டும். இப்போது ஒரு பவுலில் பால் மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொழுப்பு நீக்கப்படாத பால், குங்குமப்பூ சேர்த்து நனறாக கலந்துகொள்ள வேண்டும்.

இப்போது வேகவைத்த கேக்கை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதில் பல் குத்தும் குச்சை வைத்து கேக்கின் மேல் குத்திவிட வேண்டும். பின்னர் நாம் ஏற்கனவே கலந்துவைத்துள்ள பாலை மேலே ஊற்ற வேண்டும். அதன்பிறகு கேக்கின் மீது கிரீம் தடவி பாதாம், பிஸ்தா கலவையை மேலே தூவி அலங்கரித்து எடுத்தால் தித்திப்பான ரசமலாய் கேக் தயார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *