முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1 முதல் தொடங்கும் !!

புதுடெல்லி:
ஒவ்வொரு வீட்டின் நிலைமைகள் உடன் கூடிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்செய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் வீட்டின் நிலைமை, சொத்துகள் மற்றும் வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும்.

2027 பிப்ரவரி 1 முதல் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *