உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தில் அரசு அதி​காரி​கள் மூலம் வீடு வீடாகச் சென்று செல்​போன் எண்​களைப் பெற்று திமுக ஐடி- விங்​குக்கு கொடுக்​கப்​படு​கிறது – அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குற்​றச்சாட்டு!!

சென்னை:
உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தில் அரசு அதி​காரி​கள் மூலம் வீடு வீடாகச் சென்று செல்​போன் எண்​களைப் பெற்று திமுக ஐடி- விங்​குக்கு கொடுக்​கப்​படு​கிறது, என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

சேலம் மாநகர் மாவட்ட அதி​முக சார்​பில் நெடுஞ்​சாலை நகர் பகு​தி​யில் புதிய கட்சி அலு​வல​கத்தை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திறந்து வைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான கூட்​டணி அமோக வெற்றி பெற்று அதி​முக தனித்து ஆட்சி அமைக்​கும்.

தமிழகம் முழு​வதும் மேற்​கொண்​டுள்ள சுற்​றுப்​பயணத்​தில், திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்ற எழுச்சி மக்​கள் மத்​தி​யில் காண முடிகிறது.

அதி​முக ஆட்​சி​யின் போது ஊர் ஊராக சென்று பொது​மக்​களிடம் கோரிக்கை மனுக்​களை பெற்ற திமுக தலை​வர் ஸ்டா​லின், அந்த மனுக்​களை பெட்​டி​யில் போட்டு சீல் வைத்து எடுத்​துச் சென்​றார்.

ஆட்​சிக்கு வந்து நான்​கரை ஆண்​டு​களில் அந்த மனுக்களின் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. அப்​படி நடவடிக்கை எடுத்​திருந்​தால், இப்​போது உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்தை கொண்​டுவர வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டிருக்​காது.

உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​துக்​காக அரசு அதி​காரி​கள் மூலம் வீடு வீடாகச் சென்று தந்​திர​மாக மக்​களை ஏமாற்றி செல்​போன் எண்​களை பெற்று திமுக ஐடி-​விங்​குக்கு கொடுக்​கப்​படு​கிறது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வர 8 மாதம் உள்ள நிலை​யில், அதி​முக கூட்​ட​ணிக்கு பல்​வேறு புதிய கட்​சிகள் வரு​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்​ளன. அதி​முக கூட்​டணி மிக வலு​வாக உள்​ளது.

சேலம் மாநக​ராட்​சி​யில் பொது​மக்​களுக்​கான அடிப்​படை வசதி​கள் எது​வும் செய்​யப்​பட​வில்​லை.

மக்​கள் குறை​களை சொல்​வதற்கான மாநக​ராட்சி கூட்​டத்​தில் அதி​முக எதிர்க்​கட்​சித் தலை​வர் யாதவ மூர்த்தி மீது திமுக பெண் கவுன்​சிலர் மூலம் திட்​ட​மிட்டு தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

திமுக ஆட்​சி​யில் அனைத்​துத் துறை​களி​லும் பல்​வேறு ஊழல்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அதி​முக ஆட்சி அமைந்​ததும் துறை​வாரி​யாக திமுக செய்​துள்ள ஊழல்​கள் குறித்து விசா​ரித்து நடவடிக்கை எடுக்​கப்​படும்.

இவ்வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின்​போது, சேலம் மாநகர் மாவட்ட செய​லா​ளர் பாலு, மாவட்​ட பொறுப்​பாளர்​ சிங்​காரம்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *