சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத வழிபாட்டுக்காக நாளை (16-ந் தேதி) சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.


சபரிமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13-ந்தேதி நடைபெற்றது.

இதற்காக 11-ந்தேதி திறக்கப்பட்ட கோவில் நடை 13-ந்தேதி இரவு சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நாளை நடை திறக்கப்படுகிறது. இந்த நடை 21-ந்தேதி வரை திறந்திருக்கும்.

நாளை மறுநாள் (17-ந்தேதி) முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன.

உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம் மற்றும் படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 21-ந்தேதி பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *