ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது.
அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 15.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஸ் 78 ரன்களும் க்ரீன் 56 ரன்களும் அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார்.
தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர்.