தேர்​தல் வரவிருப்​ப​தால் அனைத்து மகளிருக்​கும் ரூ.1000 கொடுக்​க​வுள்​ள​தாக விளம்​பரப்​படுத்​தும் பணி​களை தொடங்​கி​யுள்​ளது திமுக அரசு – அண்ணாமலை !!

சென்னை:
​பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்​தலின்​போது அனைத்து மகளிருக்​கும் ரூ.1000 கொடுப்​போம் என வாக்​குறுதி கொடுத்து ஆட்​சிக்கு வந்த திமுக அரசு, 2 ஆண்​டு​கள் கழித்​து, பலமுறை, நாம் இந்த திட்​டம் செயல்​படுத்​தப்​ப​டா​மல் இருப்​பதை சுட்​டிக்​காட்​டிய பின்​பு, கடந்த 2023, செப்​டம்​பரில் அதை செயல்​படுத்​தி​யது.

அதி​லும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்​டுமே ரூ.1000 வழங்​கப்​படும் என்று கூறி மக்​களை ஏமாற்​றியது திமுக. இதனால், தமிழக பெண்​கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்​தி​யில் உள்​ளனர்.

இந்​நிலை​யில், தேர்​தல் வரவிருப்​ப​தால் அனைத்து மகளிருக்​கும் ரூ.1000 கொடுக்​க​வுள்​ள​தாக விளம்​பரப்​படுத்​தும் பணி​களை தொடங்​கி​யுள்​ளது திமுக அரசு.

உண்​மை​யில் திமுக மனம் திருந்தி பெண்​களுக்கு உதவித்​தொகை வழங்க விரும்​பி​னால், நீங்​கள் ஆட்​சிக்கு வந்​த​தில் இருந்து விடுபட்ட 50 மாத நிலு​வைத் தொகை​யான ரூ.50 ஆயிரத்​தை​யும்​ சேர்​த்​து வழங்​க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *