சென்னை:
உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ்- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
இதில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணி 198 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உமர் அமின் 58 ரன்கள் விளாசினார். சோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அடித்தார்.
பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் மோர்னே வான் விக் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் தென்ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில முதலிடம் வகிக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி, ஒரு டிரா மூலம் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி, ஒன்றில் டிரா (பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்தது) மூலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.