சென்னை:
வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. சாஹிப்சாதா பர்ஹான் 53 பந்தில் 74 ரன்னும் (3பவுண்டரி, 5 சிக்சர்), சயிம் அயூப் 49 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான்13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.