இங்கிலாந்து தோல்விக்கு நடுவர்கள் தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டிய முன்னாள் வீரர் நாசர் உசைன்!!

லண்டன்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.


கடைசி நாளன இன்று இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெடுகள் தேவையாக இருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.


இந்நிலையில் போட்டி நான்காவது நாள் முடிந்து இருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும் எனவும் நடுவர்கள் தவறு செய்து விட்டதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
திங்கட்கிழமை வேலை ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க பெருமளவு பணத்தை செலவழித்து இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தது. அவர்களுக்கு ஆட்டத்தின் கிளைமாக்ஸ் 4-வது நாளிலே அரங்கேற அனுமதித்து இருக்க வேண்டும்.

நான்காவது நாளில் இந்த போட்டி நடந்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றிக்கு தேவையான 35 ரன்கள் அடித்திருக்கலாம்.

ஆட்டம் மேலும் 42 முதல் 43 நிமிடம் வரை நடத்தலாம் என்ற விதி இருந்த போதும். ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும். இரண்டு அணிகளில் யாராவது ஒருவர் கூட நாங்கள் நாளை விளையாடுகிறோம் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை.

நடுவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு என்பதே கிடையாது. நேற்று ஆட்டம் நடைபெறாமல் இருந்தது நிச்சயம் அவமானம் தான்.
என்று நாசர் உசேன் கூறியிருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *