கிருஷ்ணஜெயந்தி வழிபாட்டு முறைகளும்….. வழிபாட்டு பயன்களும்…….

இந்தியாவில் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழ்கிறோம்.

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற பல பெயர்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் அவதரித்தது, துவாபர யுகத்தில் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் என சொல்லப்படுகிறது. இவர் தேவகிக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார்.

இதனால் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அதாவது, ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் தொடங்கும் நாளான ஆகஸ்டு 16-ந்தேதி (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு 16-ந்தேதி அதிகாலை 1.41 மணி தொடங்கி, அன்று இரவு 11.13 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா அமைந்துள்ளது.


ஆகஸ்டு 14-ந் தேதி வியாழக்கிழமையே வீட்டை சுத்தம் செய்து, ஆகஸ்டு 15-ந் தேதி வெள்ளிக்கிழமையே வீட்டை அலங்கரித்து, பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான இனிப்பு வகைகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை அழகிய, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

பிறகு குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைப்பதற்காக பச்சரிசி மாவினால் கிருஷ்ணரின் பாதங்களை, வீட்டு வாசல் தொடங்கி பூஜை அறையில் கண்ணன் சிலை அல்லது படம் வைத்திருக்கும் இடம் வரை வரைய வேண்டும்.

கிருஷ்ணருக்கு உரிய மந்திரங்கள், சுலோகங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *