சென்னை,
திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 50வது திருமணநாளை கொண்டாடுகிறார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவதிக்கும் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் , 50வது திருமணநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன், கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் .
50வது திருமணநாளை கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.