மருத்துவ சேவை வழங்​கு​வ​தி​லும், மக்​களின் உடல்​நலனை காப்​ப​தி​லும் தமிழகம் நம்​பர் 1 என்​பதை உறுதி செய்வோம் – திகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!!

சென்னை:
மருத்துவ சேவை வழங்​கு​வ​தி​லும், மக்​களின் உடல்​நலனை காப்​ப​தி​லும் தமிழகம் நம்​பர் 1 என்​பதை உறுதி செய்வோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2025-26-ம் ஆண்​டுக்​கான சுகா​தா​ரத் துறை மானியக் கோரிக்​கை​யில், உயர் மருத்​துவ சேவை​கள் வழங்க மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் “நலம் காக்​கும் ஸ்டா​லின்” சிறப்பு மருத்​துவ முகாமை கடந்த 2-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

அன்​றைய தினம் 38 மாவட்​டங்​களில் 38 இடங்​களில் நடந்த முகாம்​களில் 44,418 பேர் பயன் பெற்​றனர். இரண்​டாவது சனிக்​கிழமை​யான 9-ம் தேதி 48,046 பேர் பயனடைந்​தனர். 16-ம் தேதி சனிக்​கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்​ப​தால் முகாம் நடை​பெற​வில்​லை.

இந்​நிலை​யில், மூன்​றாவது வார​மான நேற்று முன்​தினம் 38 மாவட்​டங்​களில் 38 இடங்​களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த முகாம்​களில் 56,245 பேர் பயன் பெற்​றனர்.

இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: நலம் காக்​கும் ஸ்டா​லின் சிறப்பு மருத்​துவ முகாம்​களில் பங்​கு​கொள்​ளும் பயனாளர்​களுக்கு பொது மருத்​து​வம், பொது அறுவை சிகிச்சை மருத்​து​வம், இதய மருத்​து​வம், எலும்​பியல் மருத்​து​வம், நரம்​பியல் மருத்​து​வம், தோல் மருத்​து​வம், காது, மூக்கு மற்​றும் தொண்​டை, மகப்​பேறு, இயன்​முறை மருத்​து​வம், பல், கண் மருத்​து​வம், மனநலம், குழந்​தைகள் நலம், நுரை​யீரல் மருத்​து​வம் ஆகிய மருத்​து​வச் சேவை​கள் மற்​றும் இந்​திய மருத்​து​வம் சார்ந்த ஆலோ​சனை​கள் சிறப்பு மருத்​துவ நிபுணர்​களை கொண்டு வழங்​கப்​படு​கிறது.

பரிசோதனை​கள் மட்​டுமின்​றி, முதலமைச்​சரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்டு திட்​டத்​தின்​கீழ் பதிவு செய்​தல் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான அரசு அங்​கீ​கார சான்​றிதழ் வழங்​குதல் போன்ற சேவை​களும் வழங்​கப்​படு​கின்​றன.

மூன்​றாம் வார​மாக நடந்த முகாம்​களில் 56,245 பயனாளி​கள் பயன்​பெற்​றுள்​ளனர். மருத்​துவ சேவை வழங்​கு​வ​தி​லும், மக்​களின் உடல் நலனை காப்​ப​தி​லும் தமிழகம் நம்​பர் 1 என உறு​தி​செய்​வோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *