மும்பை பெரிய குப்பை மேட்டில் துணிச்சலுடன் நடித்த தனுஷ் !!

பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் 51- வது படம் ‘குபேரா’. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஐதராபாத் , திருப்பதி உள்பட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

தனுஷின் முதல் தோற்றம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதில் அவர் யாசகனை போல காட்சியளித்தார்.

மேலும் சில நாட்களுக்கு முன் நாகர்ஜுனாவின் தோற்றம் வெளியானது. அதில் மழையில் அவர் குடை பிடித்தபடி நடந்து வர, பின்னால் கட்டு கட்டாக பணம் இருப்பது போல காணப்பட்டது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார். இதில் அவர் 10 மணி நேரம் முககவசம் எதுவும் அணியாமல் நடித்துள்ளார்.

மேலும் உண்மையான உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அவர் முகக்கவசம் அணியாமல் அங்குள்ள துர்நாற்றத்தை சகித்து நடித்ததாக படக்குழு தெரிவித்தது.தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் வியந்து பாராட்டினார்கள்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *