தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா வரலாறு படைத்தது.
இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை ஒருநாள் தொடரை வென்ற அணி என்ற புதிய சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து (8)இந்தியா (6) உள்ளன.
மேலும், 2016 முதல் தற்போது வரை ஆஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.