சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் மெய்டன்-லீ கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 24 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ராதிகா வெல்லும் 2-வது பிஎஸ்ஏ பட்டம் இதுவாகும்.