மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி; காலிறுதியில் நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி!!

மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.

இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

இதில் 6-1 என முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட லாரன்சோ முசெட்டி அடுத்த இரு செட்களை6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நடப்பு சாம்பியனான சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *