சென்னை;
அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும் என சசிகலா கூறினார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சசிகலா, “வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.
தமிழக மக்களின் நலன்காக்க, அதிமுக ஆட்சி அமைய அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலிதாவும் எதிர்த்த திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழலை நான் உருவாக்கிவிடக்கூடாது.
அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவதுதான் தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும்.
இதுதொண்டர்களின் இயக்கம் தொண்டர்களின் முடிவே இறுதியானது. உறுதியானது. அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழி நடத்தி செல்வோம்.
ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன. அதிமுக ஒன்றிணைந்து 2026 தேர்தலை சந்தித்தால் அசுர பலத்துடன் வெற்றி பெறும். அதிமுகவின் முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை சிந்திக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.