காஷ்மீர்;
ஜம்மு-காஷ்மீர் 2019ஆம் ஆண்டில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வியாழன் அன்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றது, அப்பகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி இருக்கிறது;
காஷ்மீர் பகுதியில் கல்வீச்சில் ஈடுபட்டுவந்த அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தினை அந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாணவராக இருந்தபோது கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், தனது வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருந்ததாகவும் கூறுகிறார்.
அப்போது அவரும் அவரைப் போன்ற பலரும் கல்வீச்சு போன்ற வன்முறையில் இருந்து விலகி மாற்று வழியில் வாழ்க்கையை நடத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

“நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது கல்வீச்சில் ஈடுபட்டேன். எங்களுக்கு வேலை இல்லை. கல்லெறிவதற்கு 500 ரூபாய் கொடுத்தார்கள்” என்று அவர் நினைவூகூர்ந்திருக்கிறார். “நாங்கள் பதிலுக்கு தாக்கப்படுவோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தோட்டா அல்லது வேறு எதையும் வைத்து கல்லெறிந்தவர்களைச் சீர்திருத்த முடியவில்லை” என்கிறார்.
“அப்போது நான் என் வாக்குரிமையைக்கூட பயன்படுத்தாமல் இருந்தேன். பிறகு நான் மோடி ஜியை வெற்றிபெறச் செய்ய வாக்குளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டேன். அதனால் நான் காப்பாற்றப்பட்டேன்.
எங்களைப் போன்ற கல் வீச்சுக்காரர்கள் பலர், ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்” என்று ட்விட்டரில் பரவும் வீடியோவில் உள்ள நபர் கூறுகிறார்.