சென்னை,
தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது.
அதன்பின்பு கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது.
அந்தவகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 620-க்கும், ஒரு பவுன் ரூ.76 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது.
கடந்த 21-ந்தேதியில் இருந்து அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.390-ம், பவுனுக்கு ரூ.3,120-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640-க்கு விற்பனையாகிறது. இதே ஏறுமுகம் நீடித்தால் தங்கம் ஒரு பவுன் ரூ.78 ஆயிரத்தை விரைவில் தொட்டுவிடும்.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
01.09.2025 ஒரு சவரன் ரூ.77,640 (இன்று)
30.08.2025 ஒரு சவரன் ரூ.76,960 (நேற்று முன்தினம )
29.08.2025 ஒரு சவரன் ரூ.76,280
28.08.2025 ஒரு சவரன் ரூ.75,240
27.08.2025 ஒரு சவரன் ரூ.75,120