மின்​வாரிய ஊழியர்களுக்​கும் பண்​டிகை கால முன்​பணத்தை ரூ.20 ஆயிர​மாக உயர்த்த ஒப்​புதல்!!

சென்னை:
மின்​வாரிய ஊழியர்​கள் தங்​களின் குடும்​பத்​தினருடன் பண்​டிகைகளை சிறப்​பாக கொண்​டாட ஏது​வாக பண்​டிகை கால முன்​பணம் வழங்​கப்​படு​கிறது.

கடந்த, 2019 ஆண்​டுக்கு முன் ரூ.5 ஆயிரம் வழங்​கப்​பட்டு வந்த நிலை​யில், 2019-ம் ஆண்டு செப்டம்​பர் முதல் அது ரூ.10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரின் போது,அரசு ஊழியர்​களுக்கு பண்​டிகை கால முன்​பணம் உயர்த்​தப்​படும் என முதல்​வர் அறி​வித்​தார்.

இதையடுத்​து, பண்​டிகை கால முன்​பணம் ரூ.10 ஆயிரத்​தில் இருந்து ரூ.20 ஆயிர​மாக உயர்த்தி அரசு உத்​தரவு பிறப்​பித்​தது.

இந்​நிலை​யில், மின்​வாரிய ஊழியர்​களுக்கு இந்த பண்​டிகை கால முன்​பணம் உயர்த்து​வது தொடர்​பாக வாரிய குழு கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அதில், மின்​வாரிய ஊழியர்களுக்​கும் பண்​டிகை கால முன்​பணத்தை ரூ.20 ஆயிர​மாக உயர்த்த ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

மின்​வாரிய பணி​யாளர்​கள், மின்​பகிர்​மான கழகம், மின்​னுற்​பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழக பணி​யாளர்​கள் மற்​றும் பகுதி நேர தூய்மை பணி​யாளர்​களுக்கு பண்​டிகை கால முன்​பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்​கப்​படும் என மின் வாரி​யம்​ தெரி​வித்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *