தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்த அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், முதல் உறுப்பினராக இணைந்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி, நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்த சிறிது நேரத்திலேயே முடங்கியது.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் அந்த செயலி மூலமாக தமிழக வெற்றி கழகக்தில் உறுப்பினராக சேர முயற்சி செய்த நிலையில், அந்த செயலி முடங்கியது. வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கியது.
இதனையடுத்து முடங்கிய செயலியை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு தேர்தல் நிலைப்பாடு பற்றி விஜய் அறிவிப்பார் என மக்களிடம் கூறுங்கள்; ஏற்கெனவே இருப்பவர்கள் தவிர புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை நடத்தவும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்குப் பிறகு அடுத்தகட்ட அரசியல் நகர்வு பற்றி விஜய் அறிவித்துள்ளார்.