நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது.
இப்படத்தில் தனுஷ்,நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா,சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்திற்கு “குபேரா” என்று பெயரிடப்பட்டுள்ளனர்.
தனுஷ் இதில் சிவன் பார்வதி படத்தின் முன் நின்றிப்பது போல் போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷ் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.