ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த யார் சொல்லியும் இந்தியா கேட்கவில்லை – பாக். துணை பிரதமர் ஒப்புதல் வாக்குமூலம்!!

டெல்லி: 
ஆபரேஷன் சிந்​தூரின்போது இரு நாடு​களுக்கு இடையி​லான பிரச்​சினை​களை தீர்க்க மூன்​றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்​தியா ஏற்​க​வில்லை என்று பாகிஸ்​தான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

பாகிஸ்​தானின் துணை பிரதமரும் வெளி​யுறவு அமைச்​சரு​மான முகமது இஷாக் தாரிடம் இந்​தி​யா​வுடன் பேச்​சு​வார்தை நடத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் மற்​றும் மூன்​றாம் தரப்பு மத்​தி​யஸ்​தத்​தில் பாகிஸ்​தானின் நிலைப்​பாடு குறித்து தோஹா​வில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்​பியது.

இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு, மூன்றாம் நாடு தலையிட எங்​களுக்கு எந்த ஆட்​சேபனை​யும் இல்​லை. ஆனால், இந்​தியா இது இருதரப்பு விஷ​யம் என்று கூறி திட்​ட​வட்​ட​மாக மறுத்து வரு​கிறது.


கடந்த ஜூலை மாதம் அமெரிக்க வெளி​யுறவு துறை செய​லா​ளர் மார்​கோ ரூபியோவுட​னான சந்​திப்​பின்​போது கூட இந்​தி​யா​வுட​னான பேச்​சு​வார்த்தை பிரச்​சினையை எழுப்​பினேன்.

ஆனால், ரூபியோ, இது இருதரப்பு பிரச்​சினை என்​பதே இந்​தி​யா​வின் நிலைப்​பாடு என்று தெரி​வித்​து​விட்​டார். இருதரப்பு பிரச்​சினை​களைத் தீர்ப்​ப​தில் எந்​தவொரு மத்​தி​யஸ்​தத்​தை​யும் இந்​தியா திட்​ட​வட்​ட​மாக நிராகரித்​து​விட்​டது. அதனை ஏற்​க​வில்​லை. இவ்​வாறு இஷார் தார் தெரி​வித்​தார்.

இதுகுறித்து மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜூ நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில், “ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்​கை​யின்​போது இந்​தியா மூன்​றாம் தரப்​பின் பங்கை நிராகரித்​து​விட்​ட​தாக பாகிஸ்​தான் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

போர் நிறுத்த நடவடிக்​கை​யில் மூன்​றாம் தரப்பு தலை​யீடு இருந்​த​தாக இந்​தி​யா​வின் பிம்​பத்தை குறைத்து மதிப்​பிட்டு பிரச்​சா​ரம் நடத்திய​வர்​கள் இப்​போது மன்​னிப்​பு கேட்​பார்​களா?” என்​று கேள்​வி எழுப்​பி உள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *