விஜய் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!!

மதுரை:
விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. தவெக கூட்டத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

விஜயும் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, “விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம்.

அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. 2010-ல் மதுரை பாண்டிக்கோயிலில் ஒரு அதிமுக கூட்டம் நடந்தது. இரண்டரை லட்சம் மக்கள் திரண்டார்கள்.

சாலை முழுக்க மக்கள் கூட்டம். அதில் ஜெயலலிதா விமான நிலையத்திலிருந்து மாநாட்டு திடலுக்கு வரவே இரண்டரை மணிநேரம் ஆனது.

அப்போதெல்லாம் கட்டுக்கோப்பாக நடத்தினோம். ஆனால், கரூரில் 25 ஆயிரம் பேர்தான் வந்துள்ளார்கள். அதில் இதுபோல நடந்தது மன உளைச்சலை தருகிறது.

இனி தவெக தலைவரும் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் மக்களை சந்திக்காமல், தொகுதிவாரியாக சென்று சந்திக்கலாம்.

அல்லது பொதுவான ஒரு திடலில் கூட்டம் போடலாம். விஜய் வீடியோவில் தனது ஆதங்கத்தை சொல்லியுள்ளார்.

இந்த மாதிரி உயிர் பலி ஏற்பட காரணமானவர் யாராக இருந்தாலும், அவரின் குடும்பமே விளங்காது.

தவெக கூட்டத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜயும் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது. காவல் துறையும் வேறு இடத்தை கொடுத்திருக்கலாம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *